கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: 'எந்தக் கடுஞ்சொல்லும் போதாது'- முதல்வர் ஸ்டாலின்

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த பாலியல் குற்ற சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.கோவை மாணவி பாலியல் வழக்கு அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது. இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். கோவை மாணவி பாலியல் வழக்கு மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Nov 4, 2025 - 14:56
 0  2
கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: 'எந்தக் கடுஞ்சொல்லும் போதாது'- முதல்வர் ஸ்டாலின்

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த பாலியல் குற்ற சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது.

இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist