“கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” - அன்புமணி நம்பிக்கை

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Oct 13, 2025 - 17:20
 0  5
“கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” - அன்புமணி நம்பிக்கை

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையிலான சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கரூர் விபத்தின் பின்னணியில் பல்வேறு சதி வலைகள் இருப்பதாக ஐயங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist