கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் ஒரு நபர் ஆணையம் 2-வது நாளாக விசாரணை
கரூர் வடிவேல் நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் உயிரிழந்த காவலர் மனைவி சுகன்யா குடும்பத்தினரிடம் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார்.

கரூர்: கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்றும் (செப். 29-ம் தேதி) விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 41 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும், 110 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
What's Your Reaction?







