ஒரு நாளுக்கு இரு முறை உயரும் தங்கம் விலை; இதற்கு காரணமே அமெரிக்காவும், சீனாவும் தான்! - ஏன்?

ஜனவரி 1, 2025-ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.4,600-உம், பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.37,000 உயர்ந்துள்ளது.என்ன காரணம்? இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மிக முக்கிய காரணங்கள். அமெரிக்க பொருளாதாரத்தின் காரணமாக, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இன்னமும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கம்சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explainedஅடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இது நிச்சயம் பிற உலக நாடுகளைப் பாதிக்கிறது. இன்னொரு புறம், ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள், அமெரிக்க டாலரின் மதிப்பை வீழ்ச்சி அடைய செய்கிறது. மேலும், பல உலக நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. உலக நாடுகளின் வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.இவை எல்லாமே... தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணங்கள். இரு நாடுகள் காரணம் ஆனால், கடந்த ஒரு வாரமாக, சென்னையில் தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை (அக்டோபர் 7) முதல் இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.625-ம், பவுனுக்கு ரூ.5,000-மும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணமாக அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளைக் கூறலாம். உலக அளவில் கனிம வளங்களை அதிகம் வைத்திருக்கும் மற்றும் சப்ளை செய்யும் டாப் நாடு சீனா. அது கடந்த 9-ம் தேதி, தாங்கள் ஏற்றுமதி செய்யும் எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கா - சீனாஉலக நாடுகளுக்கு சீனா வைத்த செக்; 100% வரியை உயர்த்திய ட்ரம்ப் - என்ன நடந்தது?இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி விதித்தார். அதற்கு சீனா நிச்சயம் எதிர்வினையாற்றும். அதனால், மீண்டும் உலகில் வர்த்தகப் போர் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பயத்தினாலும், தற்போது தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலர்களைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது.இதனால், சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்களால், அது இந்தியாவில் பிரதிபலித்து ஒரு நாளுக்கு இருமுறை தங்கம் விலை மாறுகிறது. ஏற்கெனவே எகிறி கொண்டிருந்த தங்கம் விலையை, இந்தப் பயம் மேலும் உயர்த்துகிறது.

Oct 16, 2025 - 14:10
 0  8
ஒரு நாளுக்கு இரு முறை உயரும் தங்கம் விலை; இதற்கு காரணமே அமெரிக்காவும், சீனாவும் தான்! - ஏன்?

ஜனவரி 1, 2025-ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.4,600-உம், பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.37,000 உயர்ந்துள்ளது.

என்ன காரணம்?

இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மிக முக்கிய காரணங்கள்.

அமெரிக்க பொருளாதாரத்தின் காரணமாக, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இன்னமும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தங்கம்
தங்கம்

அடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இது நிச்சயம் பிற உலக நாடுகளைப் பாதிக்கிறது.

இன்னொரு புறம், ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள், அமெரிக்க டாலரின் மதிப்பை வீழ்ச்சி அடைய செய்கிறது.

மேலும், பல உலக நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.

உலக நாடுகளின் வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.

இவை எல்லாமே... தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணங்கள்.

இரு நாடுகள் காரணம்

ஆனால், கடந்த ஒரு வாரமாக, சென்னையில் தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறி வருகிறது.

கடந்த செவ்வாய் கிழமை (அக்டோபர் 7) முதல் இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.625-ம், பவுனுக்கு ரூ.5,000-மும் உயர்ந்துள்ளது.

இதற்கு காரணமாக அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளைக் கூறலாம்.

உலக அளவில் கனிம வளங்களை அதிகம் வைத்திருக்கும் மற்றும் சப்ளை செய்யும் டாப் நாடு சீனா. அது கடந்த 9-ம் தேதி, தாங்கள் ஏற்றுமதி செய்யும் எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி விதித்தார்.

அதற்கு சீனா நிச்சயம் எதிர்வினையாற்றும். அதனால், மீண்டும் உலகில் வர்த்தகப் போர் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயத்தினாலும், தற்போது தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலர்களைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

இதனால், சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்களால், அது இந்தியாவில் பிரதிபலித்து ஒரு நாளுக்கு இருமுறை தங்கம் விலை மாறுகிறது.

ஏற்கெனவே எகிறி கொண்டிருந்த தங்கம் விலையை, இந்தப் பயம் மேலும் உயர்த்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist