இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்ட சம்பவம்: அமெரிக்கா கூறும் விளக்கம் என்ன?
எங்கள் நாட்டுக்குள் உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாக வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

புதுடெல்லி: “எங்கள் நாட்டுக்குள் உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாக வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார். அந்த வகையில் சட்டவிரோத குடியேறிகள், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறியது உள்ளிட்ட காரணங்களுக்காக 1000+ இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?







