இந்தியா உடனான மோதல் எதிரொலி: சீனாவுடன் வர்த்தக ரீதியாக நெருங்கும் பாகிஸ்தான்!

சீனாவும், பாகிஸ்தானும் வர்த்தக தொடர்புகள், முதலீட்டு விவகாரங்களில் ஆழமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

May 22, 2025 - 11:52
 0  36
இந்தியா உடனான மோதல் எதிரொலி: சீனாவுடன் வர்த்தக ரீதியாக நெருங்கும் பாகிஸ்தான்!

சீனாவும், பாகிஸ்தானும் வர்த்தக தொடர்புகள், முதலீட்டு விவகாரங்களில் ஆழமான நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இதன்மூலம் சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை விரிவாக்கம் செய்ய வியூகம் வகுத்திருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாக இந்தியா விளக்கமளித்தது. ஆனாலும், பாகிஸ்தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், இரு நாடுகளும் மே.10-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist