விக்ரமை இயக்கும் ‘ராட்சசன்’ இயக்குநர்?
விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம் குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. இரண்டு இயக்குநர்களுமே வேறொரு நாயகனை வைத்து படங்கள் இயக்கவுள்ளார்கள். இதனால் விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
What's Your Reaction?







