பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானியாற்றில் திறப்பு
பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது
கோவை: பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானியாற்றில் திறக்கப்படுகிறது. இதனால் பவானியாற்று கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவையின் முக்கிய நீராதாரமான பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது.
What's Your Reaction?