தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

May 28, 2024 - 12:43
 0  1
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், முள்ளங்கினாவிளையில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை மீனம்பாக்கத்தில் 39.6 டிகிரிசெல்சியஸ் பதிவாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist