தனுஷுக்கு ஆதரவாக நடிகர் சங்கம்: அவசரமாக கூடும் தயாரிப்பாளர் சங்க செயற்குழு
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் நடத்திய கூட்டுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஆக.16 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப் படுவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
மேலும் நடிகர் தனுஷுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருப்பதால் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் பணிகளை துவங்கும் முன் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
What's Your Reaction?