சாம்பியன்ஸ் டிராபியில் ஆட தகுதியானது தானா இங்கிலாந்து?
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்ற வுடனேயே கிரிக்கெட் உலகம் முழுதும் பாகிஸ்தானுக்கு எதிரான பொதுப்புத்தி கட்டுமானங்கள் பரவலாகி வந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் அங்கு நியூஸிலாந்திடம் தோற்றுப் போனது அடுத்த துரதிர்ஷ்டம்

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்றவுடனேயே கிரிக்கெட் உலகம் முழுதும் பாகிஸ்தானுக்கு எதிரான பொதுப்புத்தி கட்டுமானங்கள் பரவலாகி வந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் அங்கு நியூஸிலாந்திடம் தோற்றுப் போனது அடுத்த துரதிர்ஷ்டம். இன்று இந்தியாவை வெல்லா விட்டால் வெளியே என்ற நெருக்கடி உள்ளது.
ஆனால், இங்கிலாந்து போன்ற அணிகள் வெளிநாடுகளில் மோசமாக ஆடும் அணி என்ற அடைமொழியைத் தக்க வைத்துள்ளனர். நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 350 ரன்களை எடுத்து தோற்க முடியும் என்றால், அது வேறு அணிகள் என்றால் பரவாயில்லை, ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட், ஆதில் ரஷீத் பிரைடன் கார்ஸ் என்றெல்லாம் அவர்கள் மொழியில் ஜாம்பவான் பவுலர்களை வைத்துக் கொண்டு தோற்க முடியும் என்றால், அது இங்கிலாந்தினால் மட்டுமே முடியும்.
What's Your Reaction?






