“காவ்யா மாறனின் கண்ணீர் என்னை பாதித்தது” - அமிதாப் பச்சன் உருக்கம்
“அணியின் உரிமையாளரான அந்த இளம் பெண் (காவ்யா மாறன்), தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டது என் மனதை பாதித்தது. பரவாயில்லை டீயர். நாளை என்பது மற்றுமொரு நாளே” என அமிதாப் பச்சன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சென்னை: “ஹைதராபாத் அணியின் உரிமையாளரான அந்த இளம் பெண் (காவ்யா மாறன்), தோல்விக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டது என் மனதை பாதித்தது. பரவாயில்லை டியர். நாளை என்பது மற்றுமொரு நாளே” என அமிதாப் பச்சன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது தனிப்பட்ட வலைதளத்தில் (Blog), “ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவடைந்துவிட்டது. கொல்கத்தா அணி உறுதியான வெற்றியை பதிவு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆட்டம் ஏமாற்றமளிக்கிறது. ஏனென்றால் ஹைதராபாத் ஒரு சிறந்த அணி. கடந்த ஆட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடினர்.
What's Your Reaction?