கனடா திரையரங்குகள் மீது தாக்குதல்: இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்

க​ன​டா​வில் இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. அதன்​தொடர்ச்​சி​யாக, திரையரங்​கு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தால் ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1  உட்பட பல இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டது. 

Oct 6, 2025 - 16:16
 0  6
கனடா திரையரங்குகள் மீது தாக்குதல்: இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்

ஒட்டாவா: க​ன​டா​வில் இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. அதன்​தொடர்ச்​சி​யாக, திரையரங்​கு​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தால் ரிஷப் ஷெட்​டி​யின் காந்​தா​ரா: சாப்​டர் 1 உட்பட பல இந்​திய திரைப்​படங்​களை திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டது. இது இந்​திய ரசிகர்​களிடையே ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளதுடன், படத்​தின் வசூலும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த தாக்​குதலுக்கு காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் காரண​மாக இருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. கனடா​வின் ஒன்​டாரியோ மாகாணத்​தில் உள்ள திரையரங்​கு​கள் கடந்த ஒரு வாரத்​தில் இரண்டு வெவ்​வேறு சந்​தர்ப்​பங்​களில் தீவைப்பு மற்​றும் துப்​பாக்கி சூடு தாக்​குதல்​களுக்கு ஆளாகி​யுள்​ளது. இதையடுத்​து, அந்த திரையரங்​கு​களில் இந்​திய திரைப்​படங்​கள் திரை​யிடு​வது உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டுள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist