உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: 2-வது தங்கம் வென்றார் அனுஷ்கா

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் 2 தங்கப் பதக்கத்தை வென்றார்.

Sep 29, 2025 - 13:24
 0  16
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: 2-வது தங்கம் வென்றார் அனுஷ்கா

புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் 2 தங்கப் பதக்கத்தை வென்றார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் 461.0 புள்ளிகள் பிடித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு தொடரில் அவர், தங்கம் வெல்வது இது 2-வது முறையாகும். அவர், 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist