இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் | பாரிஸ் ஒலிம்பிக்
ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22வயதான இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 21-12, 21-6 என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ். பிரனாயை வீழ்த்தியுள்ளார்.
பாரிஸ்: ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதான இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 21-12, 21-6 என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ்.பிரனாயை வீழ்த்தியுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய லக்ஷயா முதல் செட்டை 21-12 என கணக்கில் கைப்பற்றி அசத்தினார். 2ஆவது செட்டிலும் லக்ஷயா முன்னிலைப் பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர், 21-12, 21-6 என்ற கணக்கில் ஹெச்.எஸ். பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
What's Your Reaction?