இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய உத்தரவை தொடர்ந்து, தொகுதிக்குள் இருந்த வெளிநபர்கள் வெளியேறினர்.
விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
What's Your Reaction?