ஆண் குழந்தைக்கு தாய் ஆனார் அமலா பால்: ‘இலை’ என பெயரிட்டுள்ளதாக அறிவிப்பு!
நடிகை அமலா பால் - ஜெகத் தேசாய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
கொச்சி: நடிகை அமலா பால் - ஜெகத் தேசாய் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ஜெகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு ‘இலை’ என்று பெயரிட்டுள்ளதாகவும் ஜெகத் தேசாய் தெரிவித்துள்ளார். அமலா பால், ஜெகத் தேசாய் இருவருக்கும் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?