அனைத்து மெமு வகை ரயில்களிலும் ஜூன் முதல் தலா 4 கழிப்பறை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கம் உட்பட பல்வேறு மார்க்கங்களில் தினசரி 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

May 31, 2024 - 11:57
 0  5
அனைத்து மெமு வகை ரயில்களிலும் ஜூன் முதல் தலா 4 கழிப்பறை: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: அனைத்து மெமு வகை ரயில்களிலும் ஜூன் முதல் தலா 4 கழிப்பறைகள் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வேஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ், சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கம் உட்பட பல்வேறு மார்க்கங்களில் தினசரி 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர காட்பாடி– அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்துார், திருத்தணி – சென்ட்ரல், பித்ரகுண்டா – சென்ட்ரல் உட்பட பல்வேறு தடங்களில் 12-க்கும் மேற்பட்ட மெமு வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist