US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண்பாடானது (hypocritical), வெளிநாட்டவர்மீது வெறுப்பை கக்கும் (xenophobic) பேச்சு' என அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளனர்.பலர், வான்ஸின் மனைவி உஷா இந்தியக் குடியேறிகளின் மகள் என்பதைக் குறிப்பிட்டு, “அவரை (உஷா) இந்தியாவுக்கே திருப்பி அனுப்புங்கள்!” என்று வலியுறுத்தியுள்ளனர்.trump - Vanceஅதிகப்படியான குடியேற்றத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பறிபோகின்றன என்று குற்றம் சாட்டி, வான்ஸ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.அவர் கூறும் கருத்துக்கு எதிரான பொருளாதார ஆய்வுகள் அனைத்தும் ‘பழைய அமைப்பின் மூலம் பணக்காரர்களானவர்கள்’ நிதியில் நடத்தப்பட்டவை என்று குற்றம்சாட்டியிருந்தார்.வான்ஸ் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான வஜாஹத் அலி, “நீங்கள் உஷாவையும், அவரது இந்தியக் குடும்பத்தையும், உங்கள் இரு இனக் குழந்தைகளையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.Wajahat Ali Postஇந்த கடுமையான தாக்குதலுக்கு முன்னதாக வான்ஸ் பேசிய சில கருத்துகளும் காரணமாக அமைந்தன. “அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒத்த இனம், மொழி அல்லது தோல் நிறத்தைப் கொண்டிருப்பதை விரும்புவது முற்றிலும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும்” என்று அவர் பேசியிருந்தார்.உஷாவைக் குறிவைக்க என்ன காரணம்?சில நாட்களுக்கு முன்னர் டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், தனது மனைவி உஷா ஒருநாள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொள்வார் என நம்புவதாகத் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.ஜே.டி.வான்ஸ், உஷா வான்ஸ்பின்னர், உஷாவுக்கு “மதம் மாறும் திட்டம் இல்லை” என்றும், அவரது நம்பிக்கைகளை தான் மதிப்பதாகவும் தெளிவுபடுத்தி, சர்ச்சையை தவிர்க்க முயன்றார்.ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றவாதிகளுக்கு எதிரான சட்டங்களை பலமடங்கு கடுமையாக்கி வரும் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்'' - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்

Dec 12, 2025 - 10:12
 0  3
US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

`இந்தக் கருத்து முரண்பாடானது (hypocritical), வெளிநாட்டவர்மீது வெறுப்பை கக்கும் (xenophobic) பேச்சு' என அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளனர்.

பலர், வான்ஸின் மனைவி உஷா இந்தியக் குடியேறிகளின் மகள் என்பதைக் குறிப்பிட்டு, “அவரை (உஷா) இந்தியாவுக்கே திருப்பி அனுப்புங்கள்!” என்று வலியுறுத்தியுள்ளனர்.

trump - Vance
trump - Vance

அதிகப்படியான குடியேற்றத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பறிபோகின்றன என்று குற்றம் சாட்டி, வான்ஸ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

அவர் கூறும் கருத்துக்கு எதிரான பொருளாதார ஆய்வுகள் அனைத்தும் ‘பழைய அமைப்பின் மூலம் பணக்காரர்களானவர்கள்’ நிதியில் நடத்தப்பட்டவை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

வான்ஸ் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான வஜாஹத் அலி, “நீங்கள் உஷாவையும், அவரது இந்தியக் குடும்பத்தையும், உங்கள் இரு இனக் குழந்தைகளையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

Wajahat Ali Post
Wajahat Ali Post

இந்த கடுமையான தாக்குதலுக்கு முன்னதாக வான்ஸ் பேசிய சில கருத்துகளும் காரணமாக அமைந்தன. “அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒத்த இனம், மொழி அல்லது தோல் நிறத்தைப் கொண்டிருப்பதை விரும்புவது முற்றிலும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும்” என்று அவர் பேசியிருந்தார்.

உஷாவைக் குறிவைக்க என்ன காரணம்?

சில நாட்களுக்கு முன்னர் டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், தனது மனைவி உஷா ஒருநாள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொள்வார் என நம்புவதாகத் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜே.டி.வான்ஸ்,  உஷா வான்ஸ்
ஜே.டி.வான்ஸ், உஷா வான்ஸ்

பின்னர், உஷாவுக்கு “மதம் மாறும் திட்டம் இல்லை” என்றும், அவரது நம்பிக்கைகளை தான் மதிப்பதாகவும் தெளிவுபடுத்தி, சர்ச்சையை தவிர்க்க முயன்றார்.

ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றவாதிகளுக்கு எதிரான சட்டங்களை பலமடங்கு கடுமையாக்கி வரும் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist