No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான 'நோ கிங்ஸ்' பேரணிகள் நடைபெற்றன.அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் போராட்டங்கள் பதிவாகின. இதில் மினசோட்டா மாகாணம் போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியது. செயின்ட் பால் பகுதியில் உள்ள கேபிடல் புல்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.Actor Robert De Niro on trump at "No Kings" Day event in New York: "He can't do all the fucked-up things that he's been doing without the collusion of Congress and the goons in his administration." pic.twitter.com/p9mDN91Mr5— CSPAN (@cspan) March 28, 2026 பிரபல இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் நினைவாக எழுதப்பட்ட பாடலைப் பாடி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். "இந்த பிற்போக்குத்தனமான கனவு நீடிக்காது" என்று அவர் உணர்ச்சிவசப்படப் பேசினார். இந்தப் பேரணியில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, பாடகி ஜோன் பேஸ், நடிகை ஜேன் ஃபோண்டா மற்றும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்காவாஷிங்டன் டிசியின் லிங்கன் மெமோரியல் முதல் நேஷனல் மால் வரை நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். "மகுடத்தைக் கீழே போடு, கோமாளியே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.லாஸ் ஏஞ்சல்ஸின் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பலரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.no kings protestஅமெரிக்கா தவிர லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. லண்டனில் 'வலதுசாரிப் போக்கை நிறுத்து' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ரோமில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு எதிராகவும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கினர்.இந்தப் போராட்டங்களை குடியரசுக் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் கூறுகையில், "இவை இடதுசாரி அமைப்புகளால் திட்டமிடப்பட்டவை. பொதுமக்களின் உண்மையான ஆதரவு இதற்கு இல்லை" எனத் தெரிவித்தார். தேசிய குடியரசுக் கட்சி கமிட்டியும் (NRCC) இந்தப் போராட்டங்களை "அமெரிக்காவை வெறுக்கும் பேரணிகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு

Apr 1, 2026 - 18:48
 0  5
No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான 'நோ கிங்ஸ்' பேரணிகள் நடைபெற்றன.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் போராட்டங்கள் பதிவாகின. இதில் மினசோட்டா மாகாணம் போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியது. செயின்ட் பால் பகுதியில் உள்ள கேபிடல் புல்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பிரபல இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் நினைவாக எழுதப்பட்ட பாடலைப் பாடி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

"இந்த பிற்போக்குத்தனமான கனவு நீடிக்காது" என்று அவர் உணர்ச்சிவசப்படப் பேசினார். இந்தப் பேரணியில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, பாடகி ஜோன் பேஸ், நடிகை ஜேன் ஃபோண்டா மற்றும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாஷிங்டன் டிசியின் லிங்கன் மெமோரியல் முதல் நேஷனல் மால் வரை நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். "மகுடத்தைக் கீழே போடு, கோமாளியே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸின் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பலரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

no kings protest
no kings protest

அமெரிக்கா தவிர லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. லண்டனில் 'வலதுசாரிப் போக்கை நிறுத்து' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ரோமில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு எதிராகவும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கினர்.

இந்தப் போராட்டங்களை குடியரசுக் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் கூறுகையில், "இவை இடதுசாரி அமைப்புகளால் திட்டமிடப்பட்டவை. பொதுமக்களின் உண்மையான ஆதரவு இதற்கு இல்லை" எனத் தெரிவித்தார். தேசிய குடியரசுக் கட்சி கமிட்டியும் (NRCC) இந்தப் போராட்டங்களை "அமெரிக்காவை வெறுக்கும் பேரணிகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist