Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனே. இவர் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்னும் புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்திருக்க வேண்டியது. ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அனுமதியளிக்காததால் இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. ராகுல் காந்திதங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Goldஇந்தியா - சீனா தாக்குதல் இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடந்த தாக்குதல் குறித்து எழுதியிருக்கிறார் நாரவனே. அதில் சீனப் படைகள் இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியபோது, அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கு போன் செய்ததாகவும்... ஆனால், அவர்கள் காலம் தாமதித்து பதில் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.அந்தப் பதிலும், 'உங்களுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள்' என்பதாக இருந்திருக்கிறது.இதைக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் உள்ளிட்ட பல ஆளும் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்றது.'எங்களுக்கு தான் உரிமை!' இதையடுத்து, இந்தப் புத்தகத்தின் நகல்கள் ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கியுள்ளன... பெருமளவு ஷேர் ஆகவும் செய்கின்றன. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், தாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை என்றும், இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளது. இதையொட்டி, வெளியாகாத புத்தகத்தின் நகல் ஆன்லைனில் ஷேர் ஆவதற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் டெல்லி போலீஸார். $500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்

Feb 19, 2026 - 18:59
 0  7
Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனே. இவர் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்னும் புத்தகத்தை எழுதியிருந்தார்.

இந்தப் புத்தகம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்திருக்க வேண்டியது. ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அனுமதியளிக்காததால் இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியா - சீனா தாக்குதல்

இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடந்த தாக்குதல் குறித்து எழுதியிருக்கிறார் நாரவனே. அதில் சீனப் படைகள் இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியபோது, அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கு போன் செய்ததாகவும்... ஆனால், அவர்கள் காலம் தாமதித்து பதில் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிலும், 'உங்களுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள்' என்பதாக இருந்திருக்கிறது.

இதைக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் உள்ளிட்ட பல ஆளும் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்றது.

'எங்களுக்கு தான் உரிமை!'

இதையடுத்து, இந்தப் புத்தகத்தின் நகல்கள் ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கியுள்ளன... பெருமளவு ஷேர் ஆகவும் செய்கின்றன.

இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், தாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை என்றும், இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளது.

இதையொட்டி, வெளியாகாத புத்தகத்தின் நகல் ஆன்லைனில் ஷேர் ஆவதற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் டெல்லி போலீஸார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist