Epstein Files: "என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம்" - சர்ச்சைக்கு அனுராக் பதில்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Filesஅதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், "இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன" எனக் கூறியுள்ளார்.Anurag Kashyapஇந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.Epstein Files: `மோடி ஆன் போர்டு' முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்?
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன.
பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன.
அதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், "இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும்.
நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான்.
அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன" எனக் கூறியுள்ளார்.
இந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?







