யோகி பாபுவிடம் வாக்குக் கொடுத்த ரவி மோகன்!

கோலிவுட்டின் ‘மோஸ்ட் வாண்டட்’ இயக்குநர்களில் ஒருவராகியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்குநராக அறிமுகமான ‘கோமாளி’ படத்தில், ஜெயம் ரவி - யோகி பாபு கூட்டணி பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

Sep 19, 2025 - 15:33
 0  7
யோகி பாபுவிடம் வாக்குக் கொடுத்த ரவி மோகன்!

கோலிவுட்டின் ‘மோஸ்ட் வாண்டட்’ இயக்குநர்களில் ஒருவராகியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவர் இயக்குநராக அறிமுகமான ‘கோமாளி’ படத்தில், ரவி மோகன் - யோகி பாபு கூட்டணி பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் ஒன்றிணைந்திருக்கிறது.

இம்முறை ரவி மோகன் படத்தின் இயக்குநர்; யோகி பாபு கதையின் நாயகன். அதாவது ஒரு முன்னணி ஹீரோவின் இயக்கத்தில் ஹீரோவாகியிருக்கிறார். இது பற்றி பற்றிக் குறிப்பிட்டுள்ள யோகி பாபு: “ ‘கோமாளி’ படப்பிடிப்பின் போது, ‘நான் படம் டைரக்ட் செய்தால், நீங்கதான் ஹீரோ’ என்றார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆறு வருடங்கள் கழித்து அதை ரவி மோகன் நிறைவேற்றிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist