மக்களுக்கான படமாக ‘டீசல்’ இருக்கும்: ஹரிஷ் கல்யாண் நம்பிக்கை

சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரித்துள்ளது. அக்.17-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.

Oct 16, 2025 - 14:12
 0  6
மக்களுக்கான படமாக ‘டீசல்’ இருக்கும்: ஹரிஷ் கல்யாண் நம்பிக்கை

ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, சச்சின் கெடேகர், விநய், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘டீசல்’. சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள இப்படத்தை தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் தயாரித்துள்ளது. அக்.17-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது, “ஆக் ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. அதற்கான சரியான கதைக்காகக் காத்திருந்தேன். ‘டீசல்’ படம் அப்படி அமைந்தது. தங்கத்தை விட அதிக மதிப்புமிக்கதாகப் பார்க்கப்படும் எரிபொருள் உலகத்துக்குப் பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்தப் படம் சொல்லி இருக்கிறது. ஆக் ஷன் படத்துக்கான சரியான மீட்டரை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறேன் என்று டிரெய்லர் பார்த்த பலரும் பாராட்டினார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist