``பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜகவை தான்'' - முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி

நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வரி மாற்றம் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜி.எஸ்.டி வரி மாற்றம் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். இது தேசிய அளவில் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பா.ஜ.க கூட்டணி உறுதியாக உள்ளது.”டி.டி.டி.தினகரன்இது வரும் டிசம்பரில் பெரிய கூட்டணியாக அமையும். கடந்த மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க எங்களுடன் பயணித்தவர்கள். சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அவை விரைவில் சரி செய்யப்படும். ”பலமான கூட்டணியுடன் இணைவோம்” என, டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். அது நிச்சயமாக பா.ஜ.கவாகத்தான் இருக்கும்.அ.தி.மு.கவில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய பா.ஜ.க உதவி செய்யும். அதிமுக-வை ஒன்றிணைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. பா.ஜ.கவில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் துண்டு துண்டாக உடைந்துள்ளது.உண்மையான வாக்காளர்களை கண்டறிவதில் பா.ஜ.க தெளிவாக உள்ளது. பா.ஜ.கவில் நான் பொறுப்புடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனக்கு என்று தனியாக எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கட்சி சொல்வதையே செயல்படுத்துவேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது கட்சி தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி'' - டிடிவி தினகரன்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Sep 19, 2025 - 15:33
 0  22
``பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜகவை தான்'' - முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி

நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வரி மாற்றம் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி மாற்றம் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். இது தேசிய அளவில் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பா.ஜ.க கூட்டணி உறுதியாக உள்ளது.”

டி.டி.டி.தினகரன்
டி.டி.டி.தினகரன்

இது வரும் டிசம்பரில் பெரிய கூட்டணியாக அமையும். கடந்த மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க எங்களுடன் பயணித்தவர்கள். சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

அவை விரைவில் சரி செய்யப்படும். ”பலமான கூட்டணியுடன் இணைவோம்” என, டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். அது நிச்சயமாக பா.ஜ.கவாகத்தான் இருக்கும்.

அ.தி.மு.கவில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய பா.ஜ.க உதவி செய்யும். அதிமுக-வை ஒன்றிணைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.

பா.ஜ.கவில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் துண்டு துண்டாக உடைந்துள்ளது.

உண்மையான வாக்காளர்களை கண்டறிவதில் பா.ஜ.க தெளிவாக உள்ளது. பா.ஜ.கவில் நான் பொறுப்புடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

எனக்கு என்று தனியாக எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கட்சி சொல்வதையே செயல்படுத்துவேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது கட்சி தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist