தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலராக தீரஜ்குமார் நியமனம்
உள்துறை செயலர் பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: உள்துறை செயலர் பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை செயலராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சிட்கோ மேலாண் இயக்குநராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளிக்கல்வி துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு, கூட்டுறவு துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.கோபால் கால்நடை பராமரிப்பு, பால், மீன்வள துறை செயலராகவும், உணவு பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?