சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் உடனே சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்மொழிந்த அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்புடன் உடனே சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்மொழிந்த அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று இதுதொடர்பான அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புள்ளிவிவர சட்டத்தின்படி, மாநில அரசுகள் சமூக பொருளாதார புள்ளிவிவரங்களை சேகரிக்கலாமே தவிர, அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட இனங்கள் தொடர்பாக புள்ளிவிவரம் சேகரிக்க இயலாது.உச்ச நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கும் நிலுவையில் உள்ளது.
What's Your Reaction?