சட்டப்பேரவையில் அமளி: அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர், இன்று (வெள்ளிக்கிழமை) கறுப்புசட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். தொடர்ந்து சபாநாயகர் வந்ததும் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். சபாநாயகர் அப்பாவு இருக்கையை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் அமளி செய்தனர்.
What's Your Reaction?