இஸ்ரேல் - காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் - ட்ரம்ப் பெருமிதம்!

இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Oct 13, 2025 - 17:20
 0  5
இஸ்ரேல் - காசா மோதல் ஓய்ந்தது; இது நான் நிறுத்திய 8-வது போர் - ட்ரம்ப் பெருமிதம்!

வாஷிங்டன்: இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு வந்தது. இது நான் நிறுத்திய 8-வது போர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 240-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் கடுமையான பதிலடியைத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த பதிலடியில் 65000-க்கும் அதிகமானா பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். காசா உருக்குலைந்து கிடக்கிறது. போர் சாவுடன் பட்டினிச் சாவும் தலைவிரித்தாடத் தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist