அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை ஒழுங்​கு​முறை குழு​மம் (ரெ​ரா) மற்றும் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​துக்கு, அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள புதிய அலு​வல​கக் கட்டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

Nov 18, 2025 - 13:32
 0  3
அண்ணா நகரில் ரூ.97 கோடியில் ‘ரெரா’ அலுவலக கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை ஒழுங்​கு​முறை குழு​மம் (ரெ​ரா) மற்​றும் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​துக்கு, அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள புதிய அலு​வல​கக் கட்டிடத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை துறையை ஒழுங்​குபடுத்​த​வும், மேம்​படுத்​த​வும், மனை, அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு​களுக்​கான விற்​பனையை வெளிப்​படை​யான முறை​யில் உறு​தி​ செய்​வதற்​கும், கட்​டிட மனை விற்​பனைத் துறை​யில் நுகர்​வோர் நலனைப் பாது​காப்​ப​தற்​கும், அவர்​களின் குறை​களுக்கு விரை​வாக தீர்வு காண்​ப​தற்​கும் தமிழ்​நாடு கட்​டிடம் மற்​றும் மனை விற்​பனை ஒழுங்​கு​முறை குழு​மம் (TNRERA) மற்​றும் மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யம் (TNREAT) தமிழ்​நாடு அரசால் நிறு​வப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist